
'நாம் தமிழர் கட்சிக்கு' நாம் ஏன் இம்முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும்?
கடந்த 60 ஆண்டு கால தமிழ்நாட்டுப் பிரதான கட்சிகளின் அரசுகளுக்கு மாற்றாக யாராவது வருவார்களா என்று என்னும் நபர்களில் நானும் ஒருவன். அதற்கு ஒரு முக்கிய காரணம் நம் முந்தைய அரசுகளின் தொலைநோக்கு பார்வை இல்லாதது தான். ஒரு சிறிய உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், நம் சென்னை வேளச்சேரி. அங்கு மழை காலத்தில் வருடா வருடம் தெருக்களில் வெள்ளநீர் தங்குவதும், வீட்டிற்குள் புகுர்வதும் சகஜம்.
அங்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்று சற்று ஆராய்ந்து பார்த்தால், 1965இல் 5500 ஹெக்டராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பரப்பு, 2023குள் 600 ஆக சுருங்கியது (குறிப்பு: https://www.thehindu.com/news/cities/chennai/pallikaranai-marsh-has-shrunk-to-a-tenth-of-its-size-in-1965-amicus-curiae/article29164755.ece). அதே இடத்தில் வீடுகள் இருந்தால், பின்னர் மழைக்காலத்தில் வெள்ளம் வராமல் வேறு என்ன நடக்கும்?
Encroachment on Pallikaranai Marsh
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு அங்கமாக அப்படியே காலியாக வைத்து, மழைக்காலத்தில் தண்ணீர் தங்குவதற்கும், பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலில் போய் சேர்வதற்கும் இடையூறு வராமல் இருப்பதற்கு உறுதி செய்வதை விட்டு, கட்டிடங்கள் வருவதற்கு அனுமதி தந்தது நம் முந்தைய அரசுகள்.
இந்திய குடித்தொகை மிக அதிகமாக வளர்ந்து வருவதும் மற்றும் மக்கள் நகரங்களுக்கு அதிகம் குடிபெயர்வதாலும் தான் இத்தகைய நிலைமை வர காரணம் என்று பலர் எண்ணினாலும், ஒரு அரசு தொலைநோக்கு பார்வையுடன், இயற்கை நிலப்பரப்பை பராமரித்து, நகரத்தை அதற்கு ஏற்ப விரிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சொல்வது போல: “Prevention is better than cure”.
2026ஆம் ஆண்டு வரை நாம் தமிழர் கட்சி பற்றி நான் பெரிதாக கவனம் செலுத்த வில்லை. மாற்று அரசியலாக 2006இல் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம், 2018இல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் மற்றும் 2024இல் பாஜக அண்ணாமலையும் வந்ததும் தான் கவனித்தேன். ஆனால் இந்த கட்சிகள் வெகு காலமாக இருக்கும் இரண்டு கட்சிகளுடன் மறுபடியும் இணைந்தது வருத்தத்தை அளிக்க கூடிய விஷயம். அதே சமயத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரே நிலைப்பாட்டில் தனியாக நின்று வருவதை பாராட்ட வேண்டும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில், தேர்தல் சமயத்தில் கட்சியின் தலைவர்கள் விவாதம் செய்வது வழக்கம். அது போல தமிழ்நாட்டில் இந்த வருடம் 2026 ஜனவரி மாதம் மின்னம்பலம் Youtube சேனல் நடத்திய ‘நான் ஆட்சிக்கு வந்தால்’ என்ற தொகுப்பு ஒன்றை பார்த்தேன். அதை பார்த்த பின்பு தான் எனக்கு சீமான் என்ன சொல்ல வருகிறார் என்ற விழிப்புணர்வு வர ஆரம்பித்தது. அந்த தொகுப்பில் அவர் நம் நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை விளக்கும் விதமும், அவருடைய எளிமையான தண்மையும் புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது.
அந்த தொகுப்பில் சீமான் தவிர பிற கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.
- பாருங்கள்: நிர்மல் குமாரின் ‘நீங்கள் என் தா.வெ.கா.விற்கு வாக்களிக்க வேண்டும் ’ பேச்சு
- பாருங்கள்: ஆ.ராசாவின் ‘நீங்கள் என் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும்’ பேச்சு
- பாருங்கள்: கலயாணசுந்தரத்தின் ‘நீங்கள் என் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும் பேச்சு
ஒரு கட்டிடத்துக்கு அதன் அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல், ஒரு நாட்டிற்கு அதன் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அதன் அரசுக்கு உள்ளது. அப்படிப்பட்ட அடிப்படை தேவைகளை பற்றி பேசுவதற்கு தற்போதைய அரசியல் சூழலில் சீமான் ஒருவர் தான் உள்ளார். மற்றவர்கள் இலவசத்தை அறிவித்துக் கொண்டு வருகின்றனர்.
மேலும், தற்போது உள்ள இரு பெரிய கட்சிகளும் சில விஷயத்தை பற்றி பேசுவதற்கான தகுதியை இழந்து விட்டன, ஏனென்றால் அவர்கள் அதை பற்றி பேசினால் இத்தனை ஆண்டு காலம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்ற கேள்வி எழும்பும். உதாரணத்திற்கு, சாலை உள்கட்டமைப்பு, சுத்தம் மற்றும் கழிவு மேலாண்மையியலும், நமது பெரும் நகரங்கள், பிற மாநில பெரும் நகரங்கள் காட்டிலும் பின்தங்கி வருகிறது. இதை பற்றி அறிய, கீழே இருக்கும் பதிவை பாருங்கள்:
- https://ss2024.sbmurban.org/#/ranking/factsheet/80291 (ஹைதெராபாத், தரவரிசை #6 / 40)
- https://ss2024.sbmurban.org/#/ranking/factsheet/803339 (சென்னை, தரவரிசை #38 / 40)
- https://ss2024.sbmurban.org/#/ranking/factsheet/803754 (மதுரை, தரவரிசை #40 / 40)
நாம் தமிழர் கட்சியின் 2026 செயற்பாட்டு வரைவு இதைப்பற்றி மற்றும் பல நல்ல விஷயங்களை விரிவாக பேசுகிறது: https://makkalarasu.in/assets/NTK-2026-Manifesto.pdf. ஆனால் அதை முழுமையாக படிக்க நமக்கு நேரமும் பொறுமையும் தான் இல்லை. அதனால்தான், சீமான் அவர்கள் அவருடைய சமீபத்திய தேர்தல் பிரச்சாரங்களில் இதை புரொஜெக்டரில் ஒரு விளக்கக்காட்சியாக காமித்து மக்களுக்கு எளிய முறையில் விளக்கினார். அதில் ஒரு சிலவற்றின் இணைப்பைப் கீழே பகிர்ந்து கொள்கிறேன்:
சீமான் கூறுவதை பற்றி மக்கள் வலைத்தளங்களில் அவர்களின் கருத்தை பதிவு செய்வதையும் பார்க்க முடிகிறது:
பொதுவாக நம் வாழ்க்கையில் எல்லாம் சேர்ந்தது போல ஒன்றும் அமையாது. ஒன்று இருக்கும், ஒன்று இருக்காது. அதே போல் நாம் தமிழர் கட்சி சொல்வதில் எல்லாம் சாத்தியமா என்ற கேள்வியும் எழும்பத்தான் செய்கிறது. எனக்கும் அவர்கள் பேசுவதில் தனிப்பட்ட முறையில் சில விஷயங்களில் உடன்பாடு இல்லை. அதே சமயம், அவர்கள் எழுப்பும் பல விஷயங்களை, பேசுவதற்காகவாது யாரோ இருக்கிறாரார்களே என்ற வியப்பும் ஏற்படுகிறது!
இந்தியா போன்ற பெரும் ஜனநாயகத்தில், யாரும் வரம்பு மீறிச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய, போதுமான கட்டுப்பாடுகளும் சமநிலைகளும் உள்ளன என்று நம்புகிறேன். ஆதலால், இவர்கள் இவ்வளவு பேசினால்தான் இதில் பாதியாவது நிதர்சனத்தில் செய்ய முடியும் என்று தோன்றுகிறது.
இந்த முறை எல்லா கட்சிகள் பேசுவதை கேட்டு, யார் தொலைநோக்கு பார்வையுடன் இறுக்கர்கள் என்று யோசித்து உங்கள் வாக்களியுங்கள்! நீங்கள் இன்று தேர்ந்தெடுக்கும் அரசு, உங்கள் அடுத்த தலைமுறையை பாதிக்கும்.
நன்றி!