
ஆகாயவனம் - யூடியூப் தமிழ் ஆடியோ கதைகள் சேனல்
Aagayavanam - Inspiring Tamil Short stories -
A unique audio experience for the Tamil community. We narrate short, engaging stories that entertain, educate, and evoke emotions. Just plug in your earphones and get lost in the world of Tamil fiction. Perfect for family listening! Engaging youths!
ஆகாயவனத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! உங்கள் மனக்கண்ணில், அற்புதங்கள் செய்யும் தமிழ் ஒலிச் சித்திரங்களை நாங்கள் வழங்குகிறோம்.
திரைகளைப் பார்த்துச் சலித்த கண்களுக்கு ஓய்வு கொடுத்து, செவிகளுக்கு வளம் தரும் தமிழ்க் கதைகளை ரசிக்க வாருங்கள். இங்கே:
மனதைத் தொடும் குடும்பக் கதைகள் (Family Dramas)
எல்லோருக்குமான அறிவுக்கதைகள் (Moral Stories)
சுவாரசியமான கிராமத்து கதைகள் (Folk Tales)
அனைத்தும் குடும்பத்துடன் அமர்ந்து கேட்கும் வகையில், அர்ப்பணிப்புடன் படைக்கப்படுகின்றன. மறக்காமல் Subscribe செய்து, தமிழ்க் கதைகளின் உலகில், எங்களோடு இணையுங்கள்!
பாட்டி ஊட்டும் நிலாச் சோறு சாப்பிட்டுக்கொண்டே, பாட்டி சொன்ன கதைகளை மறக்க முடியுமா?
அந்த அழகான நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்க வருகிறது, இந்த ஆகாயவனம்.
நவீன வாழ்வியலில், தொலைந்து போன நம் பாரம்பரிய பண்பாடு, நன்னெறி சார்ந்த சக மனிதர் துன்பம் கண்டு வாடும் நம் வாழ்வியலோடு கலந்த, நம்மை வசீகரிக்கும் கதை மாந்தர் நிறைந்த சிறுகதைகளையும், ஆடியோ வடிவில் உங்களுக்காகத் தொகுத்து வழங்குகிறோம்.
வேலை நிமித்தமாகப் பயணிக்கும்போதோ அல்லது உறங்குவதற்கு முன்போ, அமைதியாகக் கேட்டு மகிழ, எங்களின் மன அமைதிக் கதைகள் உங்களுக்கு ஒரு சிறந்த துணையாக இருக்கும்.
எங்களின் இந்தச் சிறு முயற்சி உங்களுக்குப் பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும், ஆகாயவனத்தைப் பகிருங்கள்